இத்தாலியில் கப்பல் மூழ்கியதில் 14 பேர் பலி! 200 பேர் மாயம்

13/05/2014 16:13

 

இத்தாலியில் சிறியரக கப்பல் சுமார் 400க்கும் மேற்பட்ட வட ஆப்பிரிக்கர்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது லம்பெடுசா தீவுக்கு சுமார் 185 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மூழ்கியது

இந்த விபத்தில் 215 பேர் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக லம்பெடுசா துறைமுக கேப்டன் கூறுகையில், கப்பலில் எந்த பேர் வந்தனர் என்று எங்களுக்கு தெரியாது.

ஆனால் உயிர்பிழைத்தாவர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நாங்கள் விபத்து நடந்த இடத்தில் ஓய்வின்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். வட ஆப்பிரிக்கர்கள் இத்தாலிக்கு அகதிகளாக சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மட்டுமே சுமார் 1000 அகதிகள் சிசிலி தீவுக்கு சென்றுள்ளனர். இந்தஆண்டில் மட்டும் சுமார் 25000 மக்கள் இத்தாலிக்கு இடம்பெய்ர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் துணை சகாரா ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்களே. பாலஸ்தீனம் மற்றும் சிரியாவில் இருந்தும் அகதிகளாக மக்கள் இத்தாலி சென்றுள்ளனர்.