இன்றைய‌ ராசிபலன்கள்:

21/05/2014 08:19

மேஷம்                                     
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

ரிஷபம்
எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

மிதுனம்
காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

கடகம்
காலை 11 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

சிம்மம்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

கன்னி
இன்றையதினம் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

துலாம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

விருச்சிகம்
எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

தனுசு
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

மகரம்
காலை 11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். தடைப்பட்ட புதிய முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

கும்பம்
காலை 11 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்துக் கொள்ளுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

மீனம்
இன்றையதினம் வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா