இன்றைய ராசிபலன்கள்:06.06.2014

06/06/2014 07:52

மேஷம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

ரிஷபம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

மிதுனம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

கடகம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

சிம்மம்
மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

கன்னி
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

துலாம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணம் சேரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

விருச்சிகம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாகப் பேசுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

தனுசு
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

மகரம்
மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. பண விஷயத்தில் கறாராக இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

கும்பம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். மாலை 6 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

மீனம்
அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்