இன்றைய ராசிபலன்கள்:09.06.2014

09/06/2014 08:09

                     

மேஷம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ரிஷபம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

மிதுனம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

கடகம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

சிம்மம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தை பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

கன்னி
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, களைப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்தப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ராசி குணங்கள் துலாம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சிலர் உங்களை தாழ்த்துப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

விருச்சிகம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

தனுசு
எந்த பிரச்னையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

மகரம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

மீனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்