இன்றைய ராசிபலன்கள்:30.05.2014

30/05/2014 09:23

மேஷம்
புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ரிஷபம்
காலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத்தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

மிதுனம்
குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

கடகம்
ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

சிம்மம்
வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளை களின் உடல்நிலை சீராக இருக்கும். வாகனச்செலவு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோபம் குறையும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

கன்னி
இன்றையதினம் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

துலாம்
ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டி களுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதயம் உண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. பிரபங்களின் உதவி கிடைக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

விருச்சிகம்
குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

தனுசு
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பிராத்தனைகளை நிறைவேற்றுகள். கன்னிப்பெண் களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

மகரம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

கும்பம்
வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராகும். கணவன் -மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மீனம்
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு