உலகில் மிகவும் கவர்ச்சிகரமான நகரங்களின் லண்டன் முதலிடம்

22/05/2014 16:28

உலகில்  மிகவும் கவர்ச்சிகரமான நகரங்களின் தரவரிசையில் லண்டன் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
உலகிலேயே கவர்ச்சி மிகுந்த நகரம் எது என்பது பற்றிய ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது.

இதில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன், உலகில் உள்ள பல பிரபல நகரங்களை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனைதொடர்ந்து நியூயோர்க் நகரம் 2ம் இடத்திலும்,சிங்கப்பூர் 3ம் இடத்திலும் டொராண்டோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்கள் 4ம் இடத்தையும் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.