காதலியுடன் ஓட்டமெடுத்த காதலி: பின்னால் ஓடிவந்த பெற்றோர்

14/05/2014 10:24

பிரான்ஸ் நாட்டில் ஓரினச்சேர்க்கை பெண் தனது காதலியிடம் இருந்து அவரது குடும்பத்தாரால் பிரிக்கப்பட்டுள்ளார்.

பிரான்சின் சடராஸ்பார்க் நகரத்தில் 22 வயது நிரம்பிய ஓரினச்சேர்க்கை பெண் ஒருவரை அவரது குடும்பத்தினர் கடத்தி செல்கையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

இந்த பெண் தனது குடும்பத்தினர்களின் எதிர்ப்பை மீறி தனது காதலி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும் இவரது குடும்பத்தினர் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலியுடன் சென்றுள்ளார்.

அப்போது இவரது பெற்றோர்களால் கடத்தப்பட்ட இவர், பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண் பொலிசாரிடம் கூறுகையில், எங்கள் குடும்பத்தினர் மதத்தை சார்ந்து இருப்பவர்கள் என்றும் இக்காரணத்தால் எனது ஒரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.