திருமணப் பொருத்தங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா??

19/05/2014 16:45

இத்தகைய மரபு முறைத் திருமணமானது ஏறக்குறைய ஜம்பது நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்ததால்தான் தொன்மையான “தொல்காப்பியம்” என்ற இலக்கியம், திருமணப்பொருத்தங்கள் எப்படி அமைய வேண்டும், எவ்வாறு அமையக்கூடாது என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கூறும் வகையில் “பிறப்பே குடிமை” என்ற சூத்திரத்தாலும் “நிம்பிரிக்கொடுமை” என்ற சூத்திரத்தாலும் எடுத்துக் கூறுகிறது.
எனவே, திருமணம் செய்வதற்கு முன்னதாகவே பொருத்தம் பார்க்கும் வழக்கம் மிகவும் தொன்மையானது என்பதும், தொல்காப்பியரும் மிகப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த வழக்கம் நிலை பெற்றிருந்த நல்லதொரு வழக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இத்திருமணப் பொருத்தங்கள் சமுதாயத்தின் நன்மையைக் கருதியும், இல்லறமாகிய நல்லறத்தைப் பேணிக் காக்கவேண்டிய தம்பதிகளின் நல்வாழ்வையும் கருத்திற் கொண்டே தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன.
1.நட்சத்திரப் பொருத்தம்:
இதனை தினப்பொருத்தம் என்று சொல்வார்கள். இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைன ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பார்க்கக் கூடியது.
2.கணப் பொருத்தம்:
இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதி சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.
3.மகேந்திரப் பொருத்தம்:
இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.
4.ஸ்திரீதீர்க்கப் பொருத்தம்:
இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.
5.யோனிப் பொருத்தம்:
இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.
6.இராசிப் பொருத்தம்:
இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.
7.இராசியாதிபதிப் பொருத்தம்:
இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.
8.வசியப் பொருத்தம்:
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
9.இரச்சுப் பொருத்தம்:
கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.
10.வேதைப் பொருத்தம்:
தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.