பள்ளிக்கூடமாகும் ஹிட்லர் பிறந்த வீடு

18/05/2014 09:04

ஜெர்மனி சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர். இவர் பிறந்த வீடு ஆஸ்திரேலியாவில் உள்ளது. இந்த வீடு கடந்த 2 ஆண்டுகளாக சமுதாயக்கூடமாக செயல்பட்டு வந்தது.

இங்கு படிப்பறிவு பெற இயலாதவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இந்த வீட்டை வெளிநாடுகளில் இருந்து குடியேறிய மக்களுக்கு, மொழிப்பாடம் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடமாக மாற்ற ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக ஹிட்லரின் நாசிக் கட்சியினர் இந்த வீட்டை ஹிட்லரின் நினைவாக புனிதத்தலமாக மாற்ற வேண்டும் என்று கேட்டிருந்தனர்.

அதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்து விட்டது. மேலும், ஹிட்லர் வீட்டை மக்கள் வசிக்கும் வாடகை வீடாக மாற்றவும் அரசு அனுமதிக்கவில்லை.