பிரான்ஸ் நாட்டில் புயல், இருவர் பரிதாபமாக பலி

23/05/2014 08:50

 

பிரான்ஸ் நாட்டில் அதிகமாக வீசிய புயலினால் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சின் தென் மேற்கு பகுதியில் நேற்று முன் தினம் வீசிய புயலினால், பைரேனிஸ் நகரத்திலிருந்து பாரிஸ் நகரம் வரையிலும், மொத்தம் 51,000 மேற்ப்பட்ட வீடுகள் மற்றும் பல கட்டடங்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகியுள்ளனர்

இந்நிலையில் கடுமையாக வீசிய புயலின் தாக்கத்தால், 60 வயது மூதாட்டி ஒருவர் வீட்டின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து காரில் சென்ற நபர் ஒருவர் மீது மரம் இடிந்து சாய்ந்ததால் அவரும் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறியதாவது, காரின் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார் என்றும் இந்த கார் ஒரு 5 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் மரம் விழுந்ததிலிருந்து தப்பித்து இருக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 21,000 மேற்பட்ட வீடுகளில் இன்னும் மின்சாரம் வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இன்றைய தினத்திற்குள் விரைவாக மின்சாரம் வந்துவிடும் என அதிகாரிகள் நம்பிக்கை அளித்துள்ளனர்.