115வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் 2வது முதியவர்

28/05/2014 17:10

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் நகரை சேர்ந்த 115 வயது முதிய பெண்மணி ஒருவர் தனது 115வது பிறந்தநாளை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடி சாதனை படைத்தார். அமெரிக்காவின் மிக அதிக வயது பெண்மணி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1899ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி பிறந்த Jeralean Talley என்ற பெண், அமெரிக்காவில் உள்ள Montrose, Ga என்ற இடத்தில் பிறந்தார். இவர் தனது வாழ்நாளில் ஐந்து தலைமுறையினர்களை பார்த்துள்ளார். இன்னும் ஆரோக்கியமாக அவருடைய வேலைகளை அவரே செய்துகொள்ளும் அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளார்.

அமெரிக்காவின் அதிக வயதுடைய பெண்மணி என்ற பெயரெடுத்த இவர் உலகில் வாழும் மனிதர்களில் இரண்டாவதாக உள்ளார். முதலாவது இடத்தில் இருப்பவர் ஜப்பானில் வாழும் Misao Okawa என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 116 வயது ஆகிறது.

தனது 115வது பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடிய Jeralean Talley , தற்போது தனது 76 வயது மகள் Thelma Holloway என்பவரது ஆதரவில் வாழ்ந்து வருகிறார். கால்முட்டியில் சிறிதளவு வலியும், சில நேரங்களில் ஞாபகமறதியும் மட்டுமே இவரது உடலில் இருக்கும் குறைகளாக கூறுகின்றனர் இவரது உறவினர்கள்.

மிக அதிக வயதான மனிதர்கள் குறித்து ஆய்வு செய்யும் The Gerontology Research Group என்ற அமைப்பு இதுவரை 110 வயதுக்கு மேல் வாழ்ந்த 74 பேர்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. இவர்கள் கூறும் ஒரு வித்தியாசமான தகவல் என்னவெனில் இந்த 74 பேர்களில் ஆண்கள் மூன்றே மூன்று பேர் மட்டுமே. மீதியுள்ள 71 பேர்களும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.