அகதிகளின் படகு கவிழ்ந்து 400 பேருக்கு மேல் பலி.லிபியா அருகே சம்பவம்

அகதிகளின் படகு கவிழ்ந்து 400 பேருக்கு மேல் பலி.லிபியா அருகே சம்பவம்

லிபியா அருகே இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 400 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக இத்தாலியின் கடலோர காவல்படை திங்கற்கிழமை அன்று இந்த விபத்தில் சிக்கிய 144 பேரை உயிருடன் மீட்டதாக தெரிவித்தனர். அதேபோல் விபத்தில் இறந்து போனவர்களின் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 540 பேருக்கு மேற்பட்டவர்களுடன் லிபியாவில் இருந்து கிளம்பிய 24 மணி நேரத்திற்கு பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்திற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த பயங்கர விபத்தில் உயிர் இழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயதுக்கும் உட்பட்ட இளைஞர்களாக இருக்க கூடும் என தெரியவந்துள்ளது.

இதுபோல் விபத்து நடப்பது இது முதல் முறை இல்லை. ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் நடைபெரும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பலர் பிழைப்பு தேடி ஐரோப்பாவிற்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.