அச்சுவேலியில் கள்ள நோட்டுக்கொடுத்து பொருட்களைக் வாங்கியவர் கைது

அச்சுவேலிப் பகுதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்து விட்டு ஆயிரம் ரூபா கள்ள நோட்டைக் கொடுத்தவா் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபா் கொடுத்த நோட்டு கள்ள நோட்டு என அறிந்த வா்த்தகா் பொலிசாருக்கு தகவல் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கள்ள நோட்டுடன் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை, மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் வாசஸ்தலத்தில் சனிக்கிழமை (01) ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்டுள்ளதாக, என அச்சுவேலி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தனர்.இதேவேளை நெல்லியடிப் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் 4 ஆயிரம் ரூபா பெறுமதியான கள்ளநோட்டுக்கள் தனக்குத் தரப்பட்டதாக நெல்லியடி வாசியொருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணப் பகுதியில் கள்ள நோட்டின் பாவனை அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது,