அச்சுவேலி பகுதியில் சிறுவர் இல்லத்தில் இருந்து இரு சிறுவர்கள் தப்பி ஓட்டம்

அச்சுவேலி பகுதியில் சிறுவர் இல்லத்தில் இருந்து இரு சிறுவர்கள் தப்பி ஓட்டம்

அச்சுவேலியில் பகுதியில் உள்ள சிறுவர் நன்னடத்தைப் பாடசாலை விடுதியில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்கள் நேற்ற புதன்கிழமை(25) மாலையில் இருந்து காணவில்லை என அந்த விடுதியின் பொறுப்பாளரால் அச்சுவேலிப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,

முல்லைத்தீவு நெடுங்கேணி, மன்னார் வங்காலை ஆகிய பகுதியை சேர்ந்த சித்திரவேல் சிந்துஜன் (வயது 15),கணபதிபிள்ளை விஜயகாந் (வயது16) ஆகிய இருவருமே காணாமல் போனவர்களாவர்.

இருவரும் நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் இவர் விடுதியை விட்டு தப்பி ஓடியிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. இது தொடர்பாக அச்சுவேலிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.