அதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்

 அதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்

தாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின் நடுநாயகமாய் அமைந்தது ஒரு சிறிய தீவு.

யாழ் நகரில் இருந்து ஏறக்குறைய இருபது கல் தொலைவில் தென்மேற்கே அலை கடல் நடுவே அருள் ஒளி பரப்பி நிற்பது இதுதான் நயினாதீவு உருவால் சிறியதாயினும் அருளின் பொலிவால் சிறந்து விளங்கும் இத்தீவு பழைய காலம் தொட்டே பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டது.

நாகதீவு (நாகதீபம்), நாகநயினாதீவு (வையாபாடல்), மணித்தீவு (செளந்தர்யலகரி), மணிபல்லவத்தீவு ( மணிமேகலை), சம்புத்தீவு (யாழ்ப்பாணச் சரித்திரம் - யோன் ஆசிரியர்), பிராமணத்தீவு (ஒல்லாந்தர் காலம்) என்பன அவற்றுள் சில.


 

புகழ் பூத்த இச் சிறிய தீவின் பெருமைக்கு அணியாய் இன்றும் சிறப்புற்று விளங்கும் ஆலயங்கள் பல. ஆதி மனிதன் தன் சிந்தனைக்கும் செயலுக்கும் மேலாக மூலமாய் நின்று வழிநடத்திச் செல்லும் சக்தி ஒன்று உண்டென்று ஒரு கால் உணர்ந்தான். மனம் வாக்கைக் கடந்து உள்நின்ற அப்பொருளைக் கடவுள் என்று அழைத்து வழிபடத்தொடங்கினான்.

அக் காலத்தில் இருந்தே இச்சிறிய தீவில் தொன்மையான வழிபாட்டு நெறி இருந்து வந்துள்ளது என்பது வெளிநாட்டு நல்லறிஞர் பலருக்கும் ஒப்ப முடிந்த ஒரு கருத்தாகும்.

இத்தீவு வாசிகளில் பெரும்பான்மையினர் சைவ சமயத்தவர். இவர்களின் பழமையான வழிபாட்டு நெறியின் சான்றாய் இத்தீவின் பெருமைக்கு முக்கிய காரணமாய் விளங்குவது இன்று நாகபூசணி என அழைக்கப்படும் அம்பிகையின் ஆலயமாகும்.

சைவ சமயத்தவர்களின் இவ்வூரில் அமைந்துள்ள வேறு வழிபாட்டுத் தெய்வங்கள் ஐயனார், ஸ்ரீ வீரபத்திரர், வயிரவர், முருகன், வேள்விநாயன், காளி, காட்டுக் கந்தசுவாமி, விநாயகர், பிடாரி, மீனாட்சி அம்மன், மலையில் ஐயனார் இவர்களுக்கு அமைந்த கோயில்களாம். இவையன்றியும், பெளத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய வழிபாட்டுக்கான ஆலயங்களும் இங்கு அமைந்துள்ளன.

இலங்கையின் வட பாகத்தில் நாகர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் நாகத்தை வழிபட்டனர் என்று இதிகாச நூல்களால் நாம் அறியலாம். அம்மன் கோவிலின் மூலத்தானத்தே சுயம்புவாய் அமைந்துள்ள ஐந்துதலை சர்ப்பச்சிலை இதற்குத்தக்க சான்றாகும் என்று ஆராச்சியாளர் கருதுகின்றனர்.

இந்திய புராதன சிற்ப சாஸ்திர ஆராச்சியாளர் திரு எம்.நரசிம்மன் அவர்கள் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களுடன் 11-03-1951 ல் வருகை தந்தார்கள். அப்பொழுது அம்பாள் 'பாலஸ்தாபனம்' செய்யப்பட்டிருந்த காலம். மூலமூர்த்தியின் அயலே எல்லோரும் சென்று தரிசிக்கும் வாய்ப்பு இருந்தது.

இந்த ஆய்வாளர் மூலஸ்தானத்தில் அம்பாள்சிலையின் பின்புறத்தே அழகுற விளங்கும் ஐந்துதலை நாக்ச்சிலையில் தாம் கொண்டு வந்த ஒரு நுண் கருவியை அழுத்தி வெளியே கொண்டுவந்து பார்த்தார்.

இந்த நாக்ச்சிலை பதினான்காயிரம் வருடப் பழமை உடையது. இங்கு அமைந்திருந்த பழைய வழிபாட்டுப் பொருள் இதுவே. சரித்திரத்தில் கூறப்படும் சர்ப்ப வழிபாட்டுக்கு இலங்கை இந்தியாவில் வேறுஎங்கும் பார்க்கமுடியாத வகையில் பிரத்தியட்ச சான்றாக இது அமைந்திருக்கிறது.

இதில், நம்பிக்கை குறைந்தகாலத்தில் முன்னால் அம்மனை பிரதிட்டை பண்ணி இருக்கிறார்கள். இதுவே உண்மையென்று தம்முடன் வந்தோருக்கும் கூறிச் சிலையைத் தரிசிக்கச்செய்தார். பிரசித்தி பெற்ற ஆராய்ச்சியாளரான இவரின் கருத்து இக் கோவிலில் புராதன வழிபாடு நடைபெற்று வந்தமைக்கு தக்க சான்றாகும்.

பண்டிட் சேதுராமன் (அதிர்ஷ்ட விஞ்ஞானம் என்னும் சோதிடநூலின் ஆசிரியர்) 1951ஆம் ஆண்டில் இங்கு வந்தார். பூரண நாளான அன்று அம்மனை சிரத்தையோடு வழிபட்டார். பாம்பு பாம்பு என்று கூறுகிறார்களே, மகா குண்டலினியடா, வழிபடுவோருக்கு நினைத்தவரம் கொடுப்பாள்! என்றார் . மூல மூர்த்தியாக சர்ப்பஉருவில் விளங்குவது மகா குண்டலினி சக்தி என்பது இவர் கருத்து.

ஆதி சங்கராச்சாரியாரால் பாடப்பட்ட லின்காஷ்டகத்தில் 'பணிபதி வேஷ்டித கொபிதலிங்கம்' என்றது பாம்பின் படத்தினால் இயற்கையாகச் சுற்றப்பட்டது. அல்லது மூடப்பட்டது. இந்த நயினாதீவைத்தவிர வேறு ஊரில் எங்கும் இருபதாகத் தெரியவில்லை.

இவர்களே அன்றி, வேறு பல இந்திய பேரறிஞர்களும், ஞானிகளும் இங்கு வந்து அம்பாளை தரிசித்து அவள் நல்லருள் பெற்று, இந்த வழிபாட்டு இடத்தின் பழமைக்கு தக்க சான்று பகர்ந்து போய் இருக்குறார்கள். அவர்களில் முதன்மையாக எண்ணத் தக்கவர்கள் சிவானந்த சரஸ்வதி, வித்துவான் கி. வா. ஜகந்நாதன், சென்னை பேராசிரியர் ஞானசம்பந்தன், பார்த்தசாரதி, தவத்திரு குன்றக்குடி அடிகள், யோகி சுத்தானந்த பாரதியார், கிருபானந்தவாரியார் (2-9-1955), காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் போன்றோர்.

சர்வமத சமரச வழிபாட்டுக்கும் நிலைக்களனாக விளங்கும் நயினாதீவு ஆலயங்களில் பழமையானது ஸ்ரீ நாகபூசணி அம்மனின் ஆலயமே. நாகேஸ்வரி,நாகராஜேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பராசக்தி, மனோன்மணி, பரமேஸ்வரி என்று அறியப்பட்டவளும், அறுபத்துநான்கு சக்திபீடங்களுள் மணித்தீவில் புவனேஸ்வரி பீடம்

(செளந்தரியலகரி) என கூறப்பட்டதும் இதுவே என்பது ஆன்றோர் துணிபு.

அனலைதீவில் இப்போது விளங்கும் நாகதம்பிரான், ஒல்லாந்தர் இக் கோயிலை அழிப்பதற்கு முன், அம்மன் இக் கோயிலிலே இருந்தது என்று நம்பப் படுவதால் இது நாகேஸ்வரம் எனவும் அழைக்கப்பட்ட தென்பர்.

புராதன வழிபாட்டு இடமாய் அமைந்த இக்கோவிலின் ஆரம்பநிலைபற்றி நாம் இப்பொழுது அறிதற்கு தக்க சான்றுகள் கிடைத்தில. சிலப்பதிகாரகால செட்டிமார் வியாபார நிமித்தம் இங்கு வந்து போயினர்.

அம்மனைப் பூசிக்க பூவுடன் கடல்வழியே வந்தநாகத்தை தாக்க முயன்ற கருடனை அவ்வழிவந்த செட்டி விலக்கி கப்பலில் இருந்த திரவியத்தைக் கரைசேர்த்து கோயிலைச் செப்பனிட்டு நயினாபட்டர் என்னும் பிராமணரைப் பூசைக்கு நியமித்தார் அவர்பெயரால் இத்தீவு நயினாதீவு என அழைக்கப்படலாயிற்று என அறிகிறோம். இதன் அறிகுறியாக பாம்பு சுற்றிய கல், கருடன் கல் ஆகியவற்றை கோவிலுக்கு வடக்கே உள்ள கடலில் இப்பொழுதும் பார்க்கிறோம். நாகத்தால் பூசிக்கப்பட்ட அம்மை நாகபூசணி எனும் பெயர் பெற்றாள்.

ஒல்லாந்தர் காலத்தில் அம்மன் கோவில் இடித்து அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டது.அம்பாளின் திருஉரு வடமேற்கே நின்ற ஒரு ஆலமரப் பொந்துள் மறைத்து வைக்கப்பட்டது.

ஊரின் சிறப்பால் கோயிலும், கோயிலின் சிறப்பால் ஊரும் ஒன்றுக்கொன்று இணையிலாப் பெருமையும் தொன்மையும் கொண்டு விளங்கும் நயினாதீவும், இங்குறையும் ஸ்ரீ நாகபூசணி அம்பாளும் ஈழத்தில், சக்தி வணக்கப் பெருமைக்குச் சான்றாகக் காணப்படுகின்றது.

வரலாறுகளும்,நினவுகளும்

15.12.2018


செய்திகள்

யாழ் மண்ணின் மார்தட்டும்! வரலாற்று பதிவு?

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும், "சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்" திறந்து வைக்கப்பட்டுள்ளது.யாழ்.நாவற்குழியில் இன்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்...

யாழ்- ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர்கள் கைது

யாழ்ப்பாணம் ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களைபொலிஸார் கைதுசெய்ததோடு, உற்பத்தி செய்யப்பட்ட 70 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கசிப்பு ஏழாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று குறித்த இடம்...

யாழில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (24) யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது. இங்கு உற்பத்தி...

யாழில் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக "சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்" உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்...

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்

வயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் வாதரவத்தை,புத்தூரை சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி (52) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுளளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புத்தூரை சேர்ந்த குறித்த குடும்பப் பெண் நேற்று...

யாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா

யாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா...

வல்வெட்டித் துறையில் பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா!

தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார்.   வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை....

யாழில்,களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்

தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில்...

யாழ். குப்பிளானில் வாள் முனையில் கொள்ளை

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக்...

யாழில் மிக பிரம்மாண்டமாக நிக்கும் கிறிஸ்மஸ் மரம்!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

ஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்

தென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...

ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...

அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...

சுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,

நேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.     #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.     யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

1 | 2 | 3 | 4 >>