அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தார்.


   
இதற்காக தனது மனைவி டானியா அவலோஸ் மற்றும் 2 வயது மகள் ஆங்கி வலேரியா ஆகியோருடன் கடந்த வார இறுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள, மெக்சிகோவின் மட்டமோரோஸ் நகருக்கு சென்றார்.

சர்வதேச எல்லையில் உள்ள புவேர்டா மெக்சிகோ பாலம் வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த அவர்களுக்கு, அந்த பாலம் சில நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்ற செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.


பின்னர் ரியோ கிராண்டே ஆற்றின் கரை வழியே சென்ற அவர்கள், ஆற்றில் நீரின் ஓட்டம் அமைதியாக இருப்பதாக கருதி அதில் நீந்தி சென்று அமெரிக்காவில் கரையேறிவிடலாம் என எண்ணினர்.

அதன்படி தனது மகளை தோளில் சுமந்து சென்று, அமெரிக்கக் கரைப் பகுதியில் அமர வைத்து விட்டு மீண்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக மார்ட்டினஸ் மீண்டும் ஆற்றில் இறங்கினார்.

இதனால் பயந்துபோன குழந்தை ஆற்றில் குதித்தது. இதைக் கண்டு திகைத்துப் போன மார்ட்டினஸ் மகளைகாப்பாற்றும் நோக்கில் அவளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்டுள்ளார்.

அப்போது திடீரென நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் தந்தை, மகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் கரை ஒதுங்கியன.


   
இதை மெக்சிகோவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியா லி டக் என்பவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது

2015ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது சிரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் ஒரு படகில் துருக்கிக்கு பயணமாகினர். அப்போது அந்தப் படகு கடலில் மூழ்கியது.

அதில் பயணம் செய்த அய்லான் குர்தி என்னும் சிறுவனின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் சிரிய போரின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது நினைவுகூரத்தக்கது.

உலகச்செய்திகள் 28.06.2019

வெளிநாட்டுச்செய்திகள்

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்!!

திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...

விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி

ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....

சுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி

யாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...

லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்

லண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.    செல்போர்ண் வீதியில்...

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...

பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...

சுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு

சுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு!

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

யாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு

யாழ்ப்­பா­ணம்,  நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில்  9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...

ஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்!!

யாழ்ப்­பா­ணம்,  பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...

வவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு!

யாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...

நல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...

யாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்

யாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.,   வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...

சாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்

சாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...

தொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்

நிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...

நல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்

நல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...

யாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்

கிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும்...

<< 7 | 8 | 9 | 10 | 11