அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தார்.


   
இதற்காக தனது மனைவி டானியா அவலோஸ் மற்றும் 2 வயது மகள் ஆங்கி வலேரியா ஆகியோருடன் கடந்த வார இறுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள, மெக்சிகோவின் மட்டமோரோஸ் நகருக்கு சென்றார்.

சர்வதேச எல்லையில் உள்ள புவேர்டா மெக்சிகோ பாலம் வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த அவர்களுக்கு, அந்த பாலம் சில நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்ற செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.


பின்னர் ரியோ கிராண்டே ஆற்றின் கரை வழியே சென்ற அவர்கள், ஆற்றில் நீரின் ஓட்டம் அமைதியாக இருப்பதாக கருதி அதில் நீந்தி சென்று அமெரிக்காவில் கரையேறிவிடலாம் என எண்ணினர்.

அதன்படி தனது மகளை தோளில் சுமந்து சென்று, அமெரிக்கக் கரைப் பகுதியில் அமர வைத்து விட்டு மீண்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக மார்ட்டினஸ் மீண்டும் ஆற்றில் இறங்கினார்.

இதனால் பயந்துபோன குழந்தை ஆற்றில் குதித்தது. இதைக் கண்டு திகைத்துப் போன மார்ட்டினஸ் மகளைகாப்பாற்றும் நோக்கில் அவளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்டுள்ளார்.

அப்போது திடீரென நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் தந்தை, மகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் கரை ஒதுங்கியன.


   
இதை மெக்சிகோவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியா லி டக் என்பவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது

2015ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது சிரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் ஒரு படகில் துருக்கிக்கு பயணமாகினர். அப்போது அந்தப் படகு கடலில் மூழ்கியது.

அதில் பயணம் செய்த அய்லான் குர்தி என்னும் சிறுவனின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் சிரிய போரின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது நினைவுகூரத்தக்கது.

உலகச்செய்திகள் 28.06.2019

வெளிநாட்டுச்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் தீ விபத்து! இலங்கை தமிழர் காயம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...

சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்

சுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...

பிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...

பிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்

பிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...

பிரெக்ஸிட்டிற்க்கு பின்னர் சுவிட்சர்லாந்துடன் இணையும் பிரித்தானியா?

பிரெக்சிட்டில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, திடீர் திருப்பமாக, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி, சுவிட்சர்லாந்தின் 27ஆவது சுய இறையாண்மை கொண்ட மாகாணமாக இணைய இருப்பதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர்,...

லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி

லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி: இப்போது அவரின் நிலை,சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.குறித்த சாதனை தொகையை அள்ளிய அந்த நபரின் பெயர் விவரங்களை ரகசியமாக...

வெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்து எப்படி பார்க்கிறது

சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.வெளிநாட்டவர்கள் பொருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என...

வெளிநாடு ஒன்றில் தீ விபத்து! இலங்கையர் உட்பட பலர் உடல் கருகி பலி

 கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் டாக்கா நகரில் மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரும் புதிய தடை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். உறிஞ்சு குழல்கள், முள்கரண்டிகள், காது குடையும் குச்சிகள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களில்...

பிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது தங்கப்புதையல் ..?

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதி பிராந்தியங்களான பிரிட்டானி மற்றும் நார்மண்டியில், கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் பள்ளம் தோண்டியபோது ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைத்தன. அதனை தொடர்ந்து, கூடுதல்...

<< 5 | 6 | 7 | 8 | 9 >>

செய்திகள்

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...

ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை

பாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்!!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...

வவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...

இன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக  190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...

அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்

தம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...

திருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா!

வரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...

30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்

30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

1 | 2 | 3 | 4 | 5 >>