அளவெட்டியில் அனுமதியின்றி மாடு வெட்டியவர் மல்லாகம் நீதிமன்றத்தில்

அளவெட்டியில் அனுமதியின்றி மாடு வெட்டியவர் மல்லாகம் நீதிமன்றத்தில்

யாழ்.அளவெட்டியில் அனுமதியின்றி மாடு வெட்டி விற்பனை செய்த நபரொருவர் தெல்லிப்பழைப் பொலிஸாரால்
புதன்கிழமை கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் குறித்த நபர் நீதவானால் பிணையில்
விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த நபர் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் முத்திரை பொறிக்கப்படாமல் தன் இறைச்சிக் கடையில் இறைச்சி விற்பனை செய்து வந்த
நிலையில் அதனை அவதானித்த தெல்லிப்பழைச் சுகாதார வைத்திய அதிகாரி,அளவெட்டிப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோரால் இது குறித்துப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில்
முற்படுத்தினர்.

கைப்பற்றப்பட்ட இறைச்சியும் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது.அப்போது விசாரணை மேற்கொண்ட நீதவான்
சந்தேகநபரைப் பிணையில் செல்ல அனுமதித்ததோடு வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்தியும் வைத்துத் தீர்ப்பளித்தார்.