அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மாணவனுக்கு உதவும் இதயங்கள் சைக்கிள் அன்பளிப்பு

அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மாணவனுக்கு உதவும் இதயங்கள் சைக்கிள் அன்பளிப்பு

யாழ் மாவட்டத்தில் புலமைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுள் ஒருவரான அளவெட்டி அருணோதயாக் கல்லூரியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சஞ்சய் அவர்களைப் பாராட்டி புலம்பெயர் தமிழரான சீறிதாசன் அவர்களின் அனுசரணையில் ஜேர்மன் உதவும் இதயங்கள் அமைப்பின் ஊடாக துவிச்சக்கரவண்டி ஒன்றையும் ஒரு தொகுதி பணமும் வலி வடக்கு பிரதேசசபை துணை தவிசாளர் ச.சஜீவன் அவர்களால் வழங்கப்பட்டது.

இம் மாணவன் மிகவும் கஸ்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவர். இதுவரை காலமும் கல்வி கற்பதற்கு மின்சார வசதிகள் அற்ற நிலையிலும் தற்காலிக வீட்டில் இருந்து கல்வி கற்று வலி வடக்குக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவனின் விடாமுயாற்சியும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் முயற்சியின் விளைவாக இம்மாணவர் சாதனை படைத்துள்ளார்.

இம்மாணவனின் எதிர்காலத்திலும் கல்வி சாதனை படைக்க வலிவடக்கு பிரதேச சபை துணை தவிசாளர் அவர்களால் இம்மாணவனுக்கு மாதாந்த படிப்பு செலவுக்காக ரூபா 2000 ம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மின்சார சபையிடமும், பிரதேச செயலகத்திடமும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது.