அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவன் விபத்தில் படுகாயம்

அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவன்  விபத்தில்   படுகாயம்

யாழ்.அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனொருவன் பாடசாலைக்குச் செல்லும் போது கல்லூரிக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் நேற்று வியாழக்கிழமை (26.02.2015) படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனை மோட்டார்ச் சைக்கிள் மோதியதில் முகத்தில் காயமேற்பட்டுள்ளதுடன் பற்களும் சேதமடைந்துள்ளன.

அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கோபிநாத் (வயது-10) என்ற மாணவனே குறித்த விபத்தில் படுகாயமடைந்தவராவார்.