அளவெட்டி பகுதியில் பட்டப் பகலில் 10 பவுண் நகைகள் திருட்டு

அளவெட்டி பகுதியில் பட்டப் பகலில் 10 பவுண் நகைகள் திருட்டு

அளவெட்டி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில், ஆட்கள் யாரும் இல்லாத நேரம் பார்த்து நுழைந்த திருடர்கள் 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 10 பவுண் நகைகளை திருடிச் சென்றனர்.

 

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளதாக தெல்லிப்பழைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

வீட்டில் உள்ள அனைவரும் அருகில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு மதிய உணவுக்காகச் சென்றிருந்த சமயம் யன்னல் கம்பியை வளைத்து நுழைந்த திருடர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடிச் சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட, குற்றத்தடுப்பு பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சந்தேகநபர்களைப் பிடித்து அவர்களின் கைவிரல் அடையாளங்களைப் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்த பொறுப்பதிகாரி, இப்பகல் கொள்ளையுடன் தொடர்புடைய நபர்களை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்தார்.