அவுஸ்திரேலியா, அந்தமானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அவுஸ்திரேலியா, அந்தமானில் இன்று   சக்தி வாய்ந்த  நிலநடுக்கம்

பபுவா நியூகினியா அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதேபோல், அவுஸ்திரேலியாவின் பபுவா நியூகினியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோவில் இருந்த 110 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள மையப்பகுதியை சுற்றிய 300 கி.மீ. தூரத்திற்குள் சுனாமி அலைகள் எழும்ப வாய்ப்பு இருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.