அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு!

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு!

அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறிப்பிட்ட நபர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார்.

மனஸ் தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதியான சமிந்தன் கணபதி இதனை தெரிவித்துள்ளார்

குறிப்பிட்ட நபர் கடும் உளதாக்கங்களிற்கு உட்பட்டிருந்தார் அவர் சிகிச்சை கோரியபோதிலும் அவுஸ்திரேலியா அதனை மறுத்திருந்தது என சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார்.

இன்று அவர் மருத்துவகிசிச்சை பெறுவதற்காக சென்றார் அங்கு அவர் எதிர்பார்த்த உதவி கிட்டவில்லை இதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் காணப்பட்டார் எனவும் சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட நபருடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள மன்ஜீட் சிங் என்பவர் குறித்த நபர் தனது அறையை பூட்டிய பின்னர் உள்ளேயிருந்து தீச்சுவாலை வெளிவந்தது என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கதவை உடைக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை இதன் பின்னர் நானும் சில இளைஞர்களும் சேர்ந்து கதவை உடைத்து அவரை வெளியே கொண்டுவந்தோம் எனவும் மன்ஜீட் சிங் குறிப்பிட்டுள்ளார்.

நான் அவரை பார்த்தவேளை அவர் பேச முடியாத நிலையில் காணப்பட்டார் முகம் கை கால்கள் என அனைத்தும் எரிந்து காணப்பட்டன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் என்னுடன் ஆறு வருடங்களாக மனஸ் முகாமில் இருந்துள்ளார் அவரும் இந்தியாவிலிருந்து வந்தவர் எனவும் சிங் தெரிவித்துள்ளார்

 

டன்   தமிழ் ஒளியில்  சிறுப்பிட்டி  கலைஞன் சத்தியதாஸின்   நேர்கானல் 

 

உலகச்செய்திகள் 21.06.2019

வெளிநாட்டுச்செய்திகள்

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -

லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....

அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு

நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...

சுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி

சுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...

சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு

: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...

சுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு!

அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...

சுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்!

சுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...

பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு!

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>

செய்திகள்

நண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்

நண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...

யாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...

நீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்

யாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...

ஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்

இயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...

பாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை ?

பாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...

தற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

மனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...

கிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...

யாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி!

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...

நல்லூர்க் கந்தனுக்கு இன்று 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா

தைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை...

வவுனியாவில் கோரவிபத்து! 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி

வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்த...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

1 | 2 | 3 | 4 | 5 >>