அவுஸ்திரேலிய அரசு அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்க முடிவு!

அவுஸ்திரேலிய அரசு அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்க  முடிவு!

அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.
 
இது தொடர்பான திருத்தச் சட்டம் நேற்று செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதற்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் கிடைத்தன.
 
எனவே புதிய விதிகளின்படி தஞ்சம் கோரும் அகதிகள் 3 தொடக்கம் 5 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். அத்துடன் இவர்கள் தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும்.
 
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று பப்புவாநியூகினி, நவ்றூ தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான அகதிகள் அந்நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.