அவுஸ்திரேலிய முகாமில் ஈழத் தமிழர் மாரடைப்பால் மரணம்

அவுஸ்திரேலிய முகாமில் ஈழத் தமிழர் மாரடைப்பால் மரணம்

அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவில் காணப்படும் கர்ட்டின் அகதி முகாமில் ஈழத்தை சேர்ந்த அகதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

50 வயதுடைய இராமைய்யா மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் படகு பயணத்தின் மூலம் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அவர் தொடர்ந்து கொக்கோஸ் தீவில் தங்க வைக்கப்பட்டதன் பின்னர் கிறிஸ்மஸ் தீவிற்கு மாற்றப்பட்டு கர்ட்டின் தீவில் தங்க வைக்கப்பட்டார்.

இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.

எனினும் அவுஸ்திரேலியாவிற்கு சென்றது முதல் இராமைய்யாவுக்கு சரியான முறையிலேயே வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வந்துள்ளதாக சடலத்தை பரிசோதனை