ஆங்கில தினப் போட்டியில் வடமராட்சியில் 13 மாணவர்கள் சாதனை -

 ஆங்கில தினப் போட்டியில் வடமராட்சியில் 13 மாணவர்கள் சாதனை -

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஆங்கில தினப் போட்டியில் வடமராட்சி கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளைச் சேர்ந்த 13 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

ஆங்கில கட்டுரை ஆக்கப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்ரிக் கல்லூரியைச் சேர்ந்த தரம் 9 மாணவன் ந.காதுஷன் இரண்டாம் இடத்தையும் தரம் 11 மாணவன் சி. லம்போதரன் மூன்றாம் இடத்தையும் நெல்லியடி மத்திய கல்லூரி தரம் 12 மாணவி ம. துஷிதா முதலாமிடத்தையும் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்

.சொல்வதெழுதல் போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை தரம் 7 மாணவிகளான ஜெ.சர்மினி முதலாமிடத்தையும் கு.அபிநயா இரண்டாமிடத்தையும் நெல்லியடி மத்திய கல்லூரி தரம் 8 மாணவி ஜே.சாம்பவி மூன்றாமிடத்தையும் பருத்தித்துறை மெதடிஸ்த பெண் கள் உயர்தரப் பாடசாலை தரம் 11 மாணவி க.மாதுமை மூன்றாமிடத்தையும் தரம் 10 மாணவி கு. நிதுஷா இரண்டாமிடத்தையும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி தரம் 12 மாணவன் க.கஜரூபன் இரண்டாமிடத்தை யும் தரம் 12 மாணவன் பா. வினோஜன் முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.உறுப்பெழுத்துப் போட்டியில் இமையா ணன் அ.த.க. வித்தியாலயம் தரம் 3 மாணவி பி.பிரவீனா மூன்றாமிடத்தையும் எழுத்தாக்கப் போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை தரம் 11 மாணவி ரி.சங்கவி முதலாமிடத்தையும் தொடர் எழுத்துப் போட்டியில் இமையா ணன் அ.த.க. வித்தியாலயம் மாணவி இ. வந்தனா முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்