ஆண்களே…குடித்தால் கவலை தீருமா?

ஆண்களே…குடித்தால் கவலை தீருமா?

போதை என்பது ஆண்களின் மகிழ்ச்சியைத் தொந்தரவு செய்யும் ஒரு விடயம்.

போதை கட்டுப்படுத்தாதபோத, சமூகப் பிரச்சனைகள், உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும்.

ஏராளமான ஆண்கள் கவலையை மறக்கத்தான் குடிக்கிறோம் என்பார்கள்.

ஆனால், உண்மையில் குடிப்பதனால் எந்தக் கவலையையுமே மறக்க முடியாது.

போதை தலைக்கு ஏறும்போது, தற்காலிகமாக அந்த எண்ணங்களில் இருந்து விடுபடக்கூடும். ஆனால், நள்ளிரவில் தூக்கம் கலைந்தால் அத்தனை கவலைகளும் இரட்டிப்பாக மாறும்.

முன்பிருந்த கவலைகளின் அளவை விட, இப்போதைய சஞ்சலங்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். அதைத் தவிர்க்க மீண்டும் குடிப்பதுதான் ஒரேவழியாகத் தோன்றும்.

மீண்டும் மீண்டும் குடிக்கும்போது, அந்த நபரின் உடல்நிலை பாதிப்பதோடு, அவர்களின் குடும்பத்தையும் பாதிக்கும்.

இரவில் மட்டும் குடிக்கத் தொடங்கியவர் மதியம், காலை என முக்காலமும் மூழ்கும்போது ‘நேரம்’ என்ற மதிப்பில்லா விடயத்தையும் அவர் இழக்க நேரிடும்.

இதன் தொடர்ச்சியாக குடும்பத்தில் சச்சரவு, அண்டை வீட்டாரின் ஏளனம் என்று தொடங்கப்படும் பிரச்சனைகள், இறுதியில் வாழ்க்கை