ஆண்களே உங்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும்

ஆண்களே உங்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும்

நமது உடலில் பல கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. ஆரம்பத்தில் ஒரு செல் மட்டும் பிறந்து பிரிந்து பல்வேறு வகை செல்களை உண்டாக்கி அவைகளை தனித்துவப்படுத்தி ஒவ்வொரு உறுப்பையும் உண்டாக்குகிறது.

நம் உடலில் முதிர்ந்த செல்கள் அழிவதும், புதிய செல்கள் தோன்றி அதை புதுப்பித்தலும் முறையான கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டே இருக்கின்றன.

சில காரணங்களினால் இந்தக் கட்டுப்பாடு மாறி புதிய வகையான செல்கள் உருவாகி அவை மிக வேகமாக பெருகி உறுப்புகளில் கட்டியாக உண்டாகிறது. இதையே புற்று நோய் என்கிறோம்.

வயிற்றுப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், ஆண்உறுப்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய், மார்பகபுற்றுநோய் என பலவகை புற்றுநோய்கள் உள்ளன.

இதில் ஒன்றான மார்பக புற்றுநோய் பெண்களுக்கே அதிகமாக ஏற்பட்டிக்கொண்டிருந்த நிலையில், ஆண்களுக்கும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.

கட்டுப்பாடற்ற சில செல்களின் வளர்ச்சியால் ஆண்களின் மார்பக குறிகளில் சில மாற்றங்கள் ஏற்படுவதோடு, மார்பகமும் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியை சந்திக்கும்.

காரணங்கள்

ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட, க்லைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் (Klinefelter syndrome), விதை கோளாறுகள் (testicular disorders), அதிக எஸ்ட்ரோஜன் அளவு, அதிகமான ஆல்கஹால், புகைப் போன்றவை அபாயக் காரணிகளாக இருக்கின்றன.

மேலும், ஆண்களுக்கு 1 சதவீதம் மட்டுமே மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்

ஆண் மார்பக புற்றுநோய் அறிகுறிகள் ஆரம்பக் காலத்தில் சிறிய கட்டியாக உருவாகும் போது எந்த அறிகுறியும் அவ்வளவாக தெரியாது.

முலைப் பகுதியில் சொரணை இன்றி இருப்பது, சருமத்தின் நிறத்தில் மாற்றம் தெரிவது, அல்சர் போல எரிச்சல் ஏற்படுவது, அந்த பகுதி சிவந்து காணப்படுவது.

இரத்தம் அல்லது நீர் போன்ற திரவம் வெளியேறுதல். உடல் எடை அதிகரித்தல்.

மேலும், ஆண்களின் மார்பக முனைப்பகுதி சராசரியாக 2.5 cm ஆகும், இதன் அளவு அதிகரித்தல் போன்றவை அறிகுறிகளாகும்.

ஆண் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

அவரவருக்கு ஏற்பட்டிற்கும் மார்பக புற்றுநோய் தாக்கத்தின் அளவை வைத்து தான் சிகிச்சை எவ்வாறு செய்வதென்று முடிவு செய்யப்படும்.

பெரும்பாலும், அறுவை சிகிச்சையின் மூலமாக தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Radiation Treatment

மார்பக புற்றுநோய் கட்டிகளை அகற்ற கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

Hormone Therapy

tamoxifen எனும் மருந்தினை உட்கொள்வதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதின் அளவு குறைகிறது.

chemotherapy

இந்த சிகிக்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துதோடு மட்டுமல்லாமல் சில புற்றுநோய் செல்களையும் அழிக்கிறது.

கீமோதெரபி சிகிச்சை மாத்திரைகள் அல்லது ஊசி மருந்துகள் மூலமாக உடலுக்குள் செலுத்தப்படுகின்றன.

methotrexate, Rheumatrex, Trexall போன்ற மருந்துகள் இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்ற. ஆனால் இந்த கீமோதெரபி சிகிச்சை சில சமயங்களில் முடி உதிர்தல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

மருத்துவம் விஞ்ஞானம்