ஆவரங்காலில் கடனுக்கு கள்ளு கொடுக்க மறுத்தவரை தாக்கியவர் கைது

ஆவரங்காலில் கடனுக்கு கள்ளு கொடுக்க மறுத்தவரை தாக்கியவர் கைது

யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணையில் கடனுக்கு கள் கொடுக்க மறுத்த தவறணை பணியாளரின் கையை அடித்து முறித்தவரை புதன்கிழமை (12) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர்.

ஆவரங்கால் பகுதியிலுள்ள தவறணை ஒன்றில் கள் அருந்துவதற்காக நபர் ஒருவர் கடந்த 9ஆம் திகதி சென்றுள்ளார். முதல் இரண்டு குவளை கள்ளை பணம் கொடுத்து அருந்திய நபர், மூன்றாவது குவளை கள்ளை கடனுக்கு தரும்படி தவறணை பணியாளரை கேட்டுள்ளார்.

 அதற்கு பணியாளர் மறுக்கவே, மேற்படி நபர் அருகிலிருந்த கட்டையை எடுத்து பணியாளரின் கையில் பலமாக அடித்துள்ளார். பணியாளரர், கை முறிந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து, ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேநகநபரை கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.