இங்கிலாந்து சிறையில் ஈழத்தமிழர் ஒருவர் மரணம்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற இலங்கை கைதி ஒருவர், பிரித்தானிய சிறையில் உயிரிழந்துள்ளார்.

56 வயதான கந்தையா குகதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தின் ஹெம்ஷியர் பிரதேசத்தில் வின்செஸ்டர் சிறைச்சாலையின் எச்.எம்.பி. பிரிவில் உள்ள சிறையறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே இவர் உயிரிழந்துள்ளார்.

இவர் சில தினங்களாக சுகவீனமுற்றிருந்தாக சிறைச்சாலை நிர்வாகி சவுத்ஹேம்டன் திடீர் மரண விசாரணை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய ஹெம்ஷியர் பிரதேசத்தில் திடீர் மரண விசாரணையாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், உயிரிழந்தவர் மதுபான பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாகவும் இதனால் நோய்வாய்ப்பட்டிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 கந்தையா குகதாஸ் 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.