இந்தியாவில் போலிக் கடவுச்சீட்டு தயாரித்த இலங்கையர்கள் நால்வர் கைது

இந்தியாவில் போலிக் கடவுச்சீட்டு தயாரித்த இலங்கையர்கள்   நால்வர் கைது

போலி கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 
தமிழக கியூ பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இலங்கையில் இடம்பெற்ற போர் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு (குறிப்பாக தமிழகம்) சென்ற இலங்கை அகதிகள், அடிக்கடி  வெளிநாடுகளுக்கு சென்று வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
குறிப்பாக கனடா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இவர்கள் செல்வதாகவும் இவர்களுக்கான சட்டவிரோத கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
பாலா என அழைக்கப்படும் ஆர். பாலசந்திரன் (வயது 48), லிங்கரன் என்று அழைக்கப்படும் அதியமான் (வயது 43),ஜீ.ஜெயதாசன் (வயது 43), ஜீ.தனுஷன்(வயது 22) ஆகிய நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
 
அம்பத்தூர், ராம்நகர்,கிருஷ்ணாநகர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளர்.
 
இவர்கள் நால்வரும் சட்டவிரேதமான முறையில் இந்திய கடவுசீட்டுகளை தயாரித்து சென்னையில் வைத்து விநியோகித்து வந்தாக கியூ பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்