வடமாகாணக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு

 வடமாகாணக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு

வடமாகாண பாரம்பரிய  கலை நிகழ்வுகளை மேடையேற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாகவடமாகாணத்திலுள்ள சிறந்த கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும்,கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது.

 
                                                
                                                
 
 
 
இந்நிகழ்வில் வடமாகாணத்திலிருந்து சிறந்த கலைஞர்களை அவர்களின் திறமை அடிப்படையில் தெரிவு செய்து  அவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது.
 
மேலும் இந்த நிகழ்வில் வடமாகாணத்தில் மிகச்சிறந்த படைப்புக்களாக தெரிவு செய்யப்பட்ட நாடகம்,கூத்து,ஆகியவை இன்று மேடையேற்றப்பட்டு அவர்களுக்கான விருதுகளும்,கௌரவிப்பும் வடமாகாண ஆளுநரால் வழங்கப்பட்டது.
 
மேலும் இந்நிகழ்வுக்கு யாழ்.மாநகர முதல்வர் ,யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ,,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ,மற்றும் வடமாகாண பிரதம செயலாளர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.