இன்று நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா

இன்று நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா

வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த காம்யோற்சவப் பெருவிழாவில் இன்ற வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழா இடம் பெற்றது. காலையில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ஷண்முகப் பெருமான் 10.00 மணியளவில் தேரில் ஆரோகணித்து 10.45 மணியளவில் அடியவர்களின் அரோகரா கோசத்துடன் வடம்பிடித்து இழுத்து செல்லப்பட்டது. ஆலய சுற்றாடலில் கொதிக்கும் வெய்யிலில் தவிக்கும் அடியவாகளுக்கு தாகம் போக்க தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு தாகசாந்தி இடம் பெற்றதுடன் ஆலய வடக்கு தெற்கு வீதிகளில் அமைந்துள்ள மடங்களில் அன்னதானமும் இடம் பெற்றன