இன்று முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொடுப்பனவுகள்

 இன்று முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொடுப்பனவுகள்

கர்ப்பிணி தாய்மாருக்கு உணவு கொடுப்பனவாக 20,000 ரூபாவினை இன்று முதல் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று பொலனறுவையில், ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கப்படும்.

சுகப் பிரசவ திட்டத்தின் கீழ் கர்ப்பணித் தாய்மாருக்கு 20,000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் போது அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அரசாங்க மருத்துவமனைகளில் தம்மை பதிவு செய்து கொள்ளும் கர்ப்பிணித் தாய்மார் கிரமமாக பரிசோதனைக்கு செல்வதுடன், மருத்துவரின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு வழங்கப்படும் என சிறுவர் விவகார அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.