இன்று வெளியாகும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

இன்று வெளியாகும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் வெளியாகவுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன என அறிவிக்கப்பட்டிருந்தது. பரீட்சைகள் ஆணையாளர் இன்று பிற்பகல் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என  கூறியுள்ளார். 2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 34,197 பேர் தகுதி பெற்றிருந்தனர். தனியார் விண்ணப்பதாரிகள் 62,116 பேர் தகுதி பெற்றிருந்தனர் மற்றும் 2120 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றன.