இன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019

 இன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019

மேஷம்
இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

ரிஷபம்
இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்
இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் வாழ்த்துவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். மாணவர்களுக்கு புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கடகம்
இன்று குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
ராசி பலன்கள்

சிம்மம்
இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி
இன்று குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

துலாம்
இன்று பண தேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு
இன்று வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. குழந்தைகளின் கல்வியில் வேகம் காணப்படும். குடும்ப கவலை தீரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மகரம்
இன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கும்பம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்
இன்று குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ஆன்மீக செய்திகள் 24.07.2019

ஆன்மீகச்செய்திகள்

இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி

ஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...

நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்

யாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019

இன்றைய ராசி பலன் 24.05.2019

மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

இன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.   இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...

கலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்

விசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும்  வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...

ஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று

அட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். "அட்சயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...

இன்றைய ராசி பலன் 04.05.2019

மேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...

சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை

பிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று  வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது.  இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு  விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...

இன்றைய ராசி பலன் 03.05.2019

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

செய்திகள்

யாழில் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக "சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்" உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்...

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்

வயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் வாதரவத்தை,புத்தூரை சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி (52) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுளளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புத்தூரை சேர்ந்த குறித்த குடும்பப் பெண் நேற்று...

யாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா

யாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா...

வல்வெட்டித் துறையில் பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா!

தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார்.   வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை....

யாழில்,களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்

தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில்...

யாழ். குப்பிளானில் வாள் முனையில் கொள்ளை

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக்...

யாழில் மிக பிரம்மாண்டமாக நிக்கும் கிறிஸ்மஸ் மரம்!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து...

யாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று...

யாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...

நாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்

இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...

அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...

சுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,

நேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.     #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.     யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...

அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...

1 | 2 | 3 | 4 | 5 >>