இன்றைய ராசி பலன் 04.05.2019

இன்றைய ராசி பலன் 04.05.2019

மேஷம்
இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

மிதுனம்
இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். பணவரவு தாராளமாக இருக்கும். மன அமைதி ஏற்படும்.

கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும்.

கன்னி
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.


  

துலாம்
இன்று உங்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வளர்ச்சி அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.

விருச்சிகம்
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.

தனுசு
இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை ஓரளவு குறையும்.

மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மீனம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

ஆன்மீக செய்திகள் 04.05.2019

செய்திகள்

முல்லைத்தீவில் பாரிய குண்டுவெடிப்பு

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் அமைந்துள்ள மாவட்டப் படைத் தலைமையகத்திற்கு அருகில் நேற்றிரவு(04) பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றமையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.குண்டுவெடிப்பையடுத்து அப்பகுதியிலுள்ள வயல்நிலத்தில் சுமார் எட்டு அடியில் பாரிய குழியொன்று தோன்றியுள்ளது. குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது...

வவுனியா பகுதியில் இன்று காலை நில நடுக்கம்?

வவுனியா - தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச் சுற்றிய சில வீடுகளில் இன்று காலை 9.52 மணியளவில் உணரப்பட்ட நில நடுக்க அதிர்வுகள் நான்கு, ஜந்து செக்கன் வரை...

யாழில் அதிகாலையில் ஏற்பட்ட கோரச் சம்பவம் – இருவர் பலி

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன சாரதியும்...

யாழ் – இந்தியா விமான சேவை: -ஆகஸ்ட் முதல் ஆரம்பம்

சர்வதேச பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான முதலாவது விமான சேவை ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் என கூறப்படுகின்றது.இதற்கான முதல்கட்ட அபிவிருத்திப் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகத் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.நாட்டின் மூன்றாவது பன்னாட்டு...

19 பதக்கங்கள் வென்று வடக்கிற்கு பெருமை சேர்த்த 19 வீரர்கள் !

தேசிய ரீதியில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் 19 பதக்கங்களை வடக்கை சேர்ந்த வீரர், வீராங்கனைகள்வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.அகில இலங்கை ரீதியில் மாத்தறை மாவட்டத்தில், அத்துறுகிரிய பிரதேசசபை மண்டபத்தில் 28, 29, மற்றும் 30-06-2019 ஆம் திகதிகளில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில்...

புகையிரதத்துடன் மோதி பரிதாபமாக காவு கொள்ளப்பட்ட 10 உயிர்கள்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்துடன் தாண்டிக்குளம் பகுதியில் 10.45மணியளவில் புகையிரதக்கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளே இவ்வாறு குறித்த...

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபத்து

கிளிநொச்சி பரந்தன் பகுதயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்து இன்று அதிகாலைஇடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து பொருட்களை ஏற்றி சென்ற இரு பார ஊர்திகளே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.முன்னே சென்ற பார...

இலங்கையில் பியர் குடிக்கும் பெண்கள் அதிகம் வெளியாகிய தகவல்

பெண்கள் அதிகமாகப் போதைப் பொருள்களைப் பயன்படுத்தவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இதுவே இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் புதிய சவால் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்று கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு...

சுன்னாகம் பகுதியில் மோதல் சம்பவத்தில் ஒன்பது பேர் காயம்

யாழ். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதல் சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வலி.வடக்கு பகுதிகளில் இருந்து கடந்த 30...

கோர விபத்து; 3 பெண்கள் பரிதாபப் பலி – 6 பேர் படுகாயம்

அனுராதபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் மூன்று பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.தலாவ - மொரகொட சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தம்புத்தேகமயில் இருந்து அனுராதபுரம் நோக்கிப்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு

சுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு!

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -

லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....

அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு

நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...

சுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி

சுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...

சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு

: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...

சுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு!

அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...

சுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்!

சுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

1 | 2 | 3 | 4 >>