இன்றைய ராசி பலன் 05.06.2019

 இன்றைய ராசி பலன் 05.06.2019

மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.

ரிஷபம்
இன்று எந்த காரியத்தை செய்தாலும் சிறுதடை பின் நல்லது நடக்கும். சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் அடைவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.


  

துலாம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது உத்தமம்.

விருச்சிகம்
இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

தனுசு
இன்று உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.

மகரம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப் படும்.

கும்பம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

ஆன்மீக செய்திகள் 05.06.2019

ஆன்மீகச்செய்திகள்

நவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

நவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...

தீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...

இன்றைய இராசிபலன்கள் (21.09.2019)

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...

இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019

மேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...

கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...

நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...

பல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்

பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019

திருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...

கையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

யாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் பாய்ந்த மர்ம மனிதன்

யாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் சற்று முன் மர்ம மனிதன் ஒருவன் ஏறிப் பாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள சி.சி.ரிவி. கமராவை கண்காணித்துக் கொண்டிருந்த பாடசாலை அதிபர் இனந்தெரியாத ஒரு நபர் பாடசாலைக்குள் பாய்வதை அவதானித்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்த...

கெடிகாமம் பகுதியில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்

தென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.நேற்று (27) இரவு 7.00 மணியளவில் கொடிகாமம் பேருந்து நிலையத்திற்கு பின் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து இறந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.60...

பருத்துறையில் 8 பேரை கடித்து குதறிய விசர்நாய்

கடந்த திங்கட்கிழமை 23.09.2019 அன்று காலை முதல் மதியம்வரை பருத்தித்துறை சிவன் கோவிலடியிலிருந்து மந்திகை சிலையடி, கண்ணகையம்மன் கோவில் வரை விலங்கு விசர் நோயுடையதெனச் சந்தேகிக்கப்படும் நாயொன்று கடித்ததில் 8 பேர் வரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...

யாழ் குடும்பப்பெண் தீயில் கருகி உயிரிழப்பு

கடந்த வாரம் கடற்றொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கரை...

நாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகள் இயங்காது

நாளையும் நாளை மறுதினமும் வடக்கு, கிழக்கில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களும் சுகயீன லீவு போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதால் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பி அசௌகரியங்களுக்கு உள்ளாகவேண்டாம் என கல்விச்சமூகத்தால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 26,27ம் திகதிகளில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம்...

இரண்டு பிள்ளைகள்வெளிநாட்டில் ! யாழில் சடலமாக மீட்கப்பட்ட தாய்

யாழ்ப்பாணத்தில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 61 வயதான குடும்பப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.நேற்று பெய்த அடைமழையின் போது உறவினர்கள் சிலர் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர் மயக்கமடைந்த...

கொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில்...

மழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு

யாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...

யாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...

பாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.     #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.     யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...

அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...

கடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்

காதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார்.  ...

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...

இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...

மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது

உலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...

வெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்

சுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்!!

திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...

1 | 2 | 3 | 4 | 5 >>