இன்றைய ராசி பலன் 05.06.2019

 இன்றைய ராசி பலன் 05.06.2019

மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.

ரிஷபம்
இன்று எந்த காரியத்தை செய்தாலும் சிறுதடை பின் நல்லது நடக்கும். சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் அடைவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.


  

துலாம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது உத்தமம்.

விருச்சிகம்
இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

தனுசு
இன்று உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.

மகரம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப் படும்.

கும்பம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

ஆன்மீக செய்திகள் 05.06.2019

ஆன்மீகச்செய்திகள்

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2019

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - 201902.07.2019 செவ்வாய்க்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.06.07.2019 சனிக்கிழமை 5ம் நாள் உற்சவம் இரவு - முத்துச்சப்பரத் திருவிழா08.07.2019...

யாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்

யாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும்...

யாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்

சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை...

யாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்

யாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா  புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...

யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்

சைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய  பஞ்சமுக விநாயகர்   பஞ்சகுண்டபக்ஷ  நூதன பிரதிஷ்டா  மஹா கும்பாபிஷேகம் நாளை...

இன்றைய ராசி பலன் 05.06.2019

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...

நல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு

விகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...

நல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...

சுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா

ஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...

இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி

ஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>

செய்திகள்

யாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று...

யாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...

நாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்

இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...

பட்டாதாரிகளான மாற்றுத்திறனாளிகள்! முன்னாள் போராளிகள் சாதனை

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு...

யாழில்,இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை

இரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று (8) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. தந்தையார் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையே, கிணற்றிலிருந்து...

யாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...

யாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்

யாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...

யாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...

யாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...

யாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி

யாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார்.    இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...

சுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,

நேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.     #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.     யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...

அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...

கடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்

காதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார்.  ...

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...

இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...

1 | 2 | 3 | 4 | 5 >>