இன்றைய ராசி பலன் 09.02.2019

 இன்றைய ராசி பலன்  09.02.2019

மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

கடகம்
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைகேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

சிம்மம்
இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.

கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும்.



துலாம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.

தனுசு
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மகரம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால்  அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

மீனம்
இன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.

ஆன்மீக செய்திகள் 09.02.2019

ஆன்மீகச்செய்திகள்

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு ? சிவராத்திர சிறப்பு

உலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர்.மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது...

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...

புதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்?

தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....

குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்

இதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...

இன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019

மேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....

இன்றைய இராசிபலன்கள் (19.10.2019)

மேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...

இன்றைய இராசிபலன்கள் (18.10.2019)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

இன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

நவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

நவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...

தீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

யாழ். திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த, தாவடியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரிடமிருந்து 4 கிராம் கஞ்சா மற்றும் 120 மில்லிகிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய...

யாழில் இரண்டு வாரத்தில் 37,000 கிலோ பார்த்தீனியம் அழிப்பு

வடமாகாண விவசாய அமைச்சு பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகப் பொதுமக்களிடம் இருந்து பார்த்தீனியத்தை ஒரு கிலோவுக்குப் 10 ரூபாய் கொடுத்துக் கொள்வனவு செய்து அழிக்கும் திட்டமொன்றை யாழ் மாவட்டத்தில் முன்னெடுத்து வருகிறது. திட்டம் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆனநிலையில், இதுவரையில் 37,700கிலோ...

வடமாகாணக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு

வடமாகாண பாரம்பரிய  கலை நிகழ்வுகளை மேடையேற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாகவடமாகாணத்திலுள்ள சிறந்த கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும்,கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது.                        ...

யாழ்.சாவகச்சேரியில் குளவிகள் தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில்

யாழ். சாவகச்சேரியில் திங்கட்கிழமை (30) குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மரமொன்றிலிருந்த குளவிக்கூடு திடீரெனக் கலைந்தது. இந்த நிலையில் வைத்தியசாலை...

யாழ்.ஏழாலையில் பனை வீழ்ந்து வீடு சேதம்

ஏழாலை தெற்கு சிவகுரு வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் பனை மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லையென கிராம சேவை அதிகாரி குறிப்பிட்டார். பக்கத்து...

யாழ். கொக்குவில் சந்திக்கு அருகில் ரவுடிகளின் அட்டகாசம்

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள கோவில் சுற்றுவட்டாரத்திர் மாலை நேரத்தில் இருந்து நள்ளிரவு வரை கூடும் ரவுடிக் கூட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன . அப்பகுதியால் போவோர் வருவோரிடம் இவர்கள் சேஷ்'டைகள் புரிவதாகவும்...

யாழ் மீசாலை வடக்கில் ஆணின் உடலம் மீட்பு!

யாழ்.மீசாலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் உடலம் நேற்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்தனர். அதேயிடத்தினைச் சேர்ந்த குணசிங்கம் குணரட்ணம் (வயது 35) என்பவரே இவ்வாறு உடலமே மீட்கப்பட்டார். இவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில்...

நயினாதீவு நாகபூஷணி அம்மன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.   தொடர்ந்து 16 தினங்கள்  திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும்,...

ஆடு கொண்டுபோனதால் மனைவியைத் தாக்கிய கணவர்.ஊரெழுப் பகுதியில் சம்பவம்

தான் வளர்த்த ஆட்டினைச் சினைப் படுத்துவதற்காக ஆடு சினைப்படுத்தும் இடத்திற்கு ஆட்டைக் கொண்டு போன மனைவியை நையப்புடைத்துள்ளார் கணவர். ஊரெழுப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் காயமடைந்த மனைவி தற்போது  கணவரைப் பிரிந்தூ தாயாருடன் இருப்பதாகத் தெரியவருகின்றது. பல நாட்களாக தான் வளர்த்து வந்த ஆட்டைச்...

யாழ். குருநகர்ப்பகுதியில் தீயில் எரிந்து இரு வீடுகள் நாசம்

யாழ். குருநகர்ப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தீவிபத்தில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. மற்றொரு வீடு பகுதியாக எரிந்து சேதமடைந்துள்ளது. இன்று குருநகர் பாங்ஷால் வீதியில் குடிமனைகள் நெருக்கமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் இரு வீடுகள் முற்றாக எரிந்து நாசமானது....

<< 253 | 254 | 255 | 256 | 257 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து . க.சத்தியதாஸ் வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி 29.02.2020

வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி திரு. சத்தியதாஸ் அவர்கள் இன்று 29.02.2020 சனிக்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி மற்றும் அன்பு பிள்ளைகள், உறவுகள் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் நேய் நொடியின்றி சிறுப்பிட்டி ஸ்ரீ ஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றனர்...

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

1 | 2 | 3 | 4 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...

பிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...

கை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...

கனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...

கொனோரா வைரசின் தாக்கம்!! உலகையே உலுக்கிவரும் புகைப்படம்

கொனோரா வைரசின் தாக்கம்!!  உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...

ஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்

தென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...

ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...

அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

1 | 2 | 3 | 4 | 5 >>