இயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்துபோகக்கூடிய 15 நாடுகள்?

இயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்துபோகக்கூடிய 15 நாடுகள்?

இயற்கை பேரிடர்களால் முழுமையாக பாதிக்கக்கூடிய அபாயகரமான 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

 

2018 ம் ஆண்டின் உலக ஆபத்து அறிக்கையை சற்று புரட்டி பார்த்தோமானால் , 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அழிந்து போகுமாம். அந்த ஆபத்தான காலகட்டத்தை எப்படி அந்நாடுகள் எதிர்கொள்ளும் என்ற சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்க்கலாம். 

 

ஜெர்மனியில் உள்ளரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்பாட்டு உதவி கூட்டணி என்ற அரசுசாரா நிறுவனம் சேர்ந்து நடத்திய இந்த ஆய்வில் குழந்தைகளின் நிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அவர்களின் தரவுகளின்படி, உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது .

 

மேலும், மோதல்கள் அல்லது இயற்கைப் பேரிடர்களால் 2017ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்த, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 18 வயதுக்கு கீழ் உடையவர்கள் என்கிறது அந்த ஆய்வு .

 

ஆபத்தான பட்டியல் உள்ள நாடுகளின் லிஸ்ட்: 

 

              நாடுகள்              ஆபத்து பட்டியல் 

 

 

             1.வனுஅடூ                 -      50.28

             2.டொங்கா                 -      29.42

             3.பிலிப்பைன்ஸ்   -     25.14

             4.சாலமன் தீவுகள்     - 23.29

             5.கயானா                  -      23.23

             6.பப்புவா நியூ கினியா - 20.88

             7.குவாட்டமாலா -         20.60

             8.புருனை                 -         18.82

             9.வங்கதேசம்          -         17.38

            10.ஃபிஜி                             -     16.58

            11.கோஸ்டா ரிகா    - 16.56

            12.கம்போடியா           - 16.07

            13.கிழக்கு திமொர் -  16.05

            14.எல் சல்வடோர்     - 15.95

            15.கிரிபடி             -15.42

 

 

உயரும் கடல் மட்டம் உள்ளிட்ட பல்வேறு பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் அபாயங்களில் உள்ள பல தீவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

 

தென் பசிஃபிக் பகுதியில் இருக்கும் சிறிய தீவான வனுஅடூ, உலகில் பாதிக்கப்படும் நாடுகளில் முதலில் உள்ளது. அதன் அருகில் உள்ள டொங்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

சுமார் 104 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

மத்திய மற்றும் தென் பசிஃபிக் கடலில் இருக்கும் தீவுகள் ஒட்டுமொத்தமாக அபாயகரமான பகுதியாக இருப்பதாக ஜெர்மன் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள முதல் 50 நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

 

ஆய்வறிக்கையின் படி, குறைந்த அபாயம் உள்ள நாடு "கத்தார்" தான் .

 

 

இயற்கை பேரிடர்களுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

இதற்கு சிறந்த உதாரணமாக ஐரோப்பிய நாடுகளை அவர்கள் கூறுகின்றனர். கடந்த வசந்த மற்றும் கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளை தாக்கிய கோடைக் காற்றால், விவசாயம் நேரடியாக பாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை சிறப்பாக எதிர்கொண்டனர்.

 

"வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு குறைந்தளவே பாதிப்பு இருந்தது. இறுதியாக பேரழிவில் இருந்து தப்பித்தது" என்கிறார் ரூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கட்ரின் ரட்கே.

 

இதனால்தான், அடிக்கடி பூகம்பம் ஏற்படும் ஜப்பான் மற்றும் சிலி போன்ற நாடுகள் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இல்லை.

 

"இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய அழிவுகளை இந்த நாடுகளால் குறைக்க முடியாது. ஆனால், இவை மிகவும் பாதிப்படையும் நிலையில் இல்லை" என்று அந்த ஆய்வு கூறுகிறது.

 

"பருவநிலையைப் பொறுத்த வரை, 2018ஆம் ஆண்டு அதன் முக்கியத்துவத்தை பெரிதும் புரிய வைத்த ஆண்டு. தீவிர இயற்கை நிகழ்வுகளுக்கு நாம் தயார்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த ஆண்டு உணர்த்தியுள்ளது" என்கிறார் மேம்பாட்டு உதவி கூட்டணியின் தலைவர் ஏஞ்சலிக்கா பொஹ்லிங்.

உலகம், 05.12.2018

உலகச்செய்திகள்

உலகின் தலைசிறந்த ஆசிரியர்களுள் ஒருவராக தமிழ் பெண்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்கின்ற விடயமாக இது அமைகின்றது.முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது...

லண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி

லண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி...

கனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி!

கனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும்...

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது!

உலகச்செய்திகள்--  பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நாட்டில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.Gloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குடிவரவு...

சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர் திருநாள் சிறப்புடன்

சுவிஸ்  சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர்திருநாள் விழா 17.02.2019 ஞயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல்,அதனை தொடர்ந்து நினைவச்சுடர் என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.    நிகழ்வுகளில் ஆரம்பநிகழ்வாக  விணாகானம்...

ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம்பெண்

ஈராக் நாட்டில் முதன்முறையாக இளம் பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளடங்குவர். கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள...

லண்டனில் தஞ்சம் கோரும் தமிழர்கள். நீதிமன்றம் புதிய சட்டம்

அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக...

கனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்

காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள்,...

லண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார்

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என  இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது....

பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்!

மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்களுள் 52 ஆண்களும் 3...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)

இன்று  திரு திருமதி  பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட  திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும்   உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...

பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன்   அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...

திருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019.    திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...

பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...

பிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன்  வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா  யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...

1 | 2 | 3 >>