இயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்துபோகக்கூடிய 15 நாடுகள்?

இயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்துபோகக்கூடிய 15 நாடுகள்?

இயற்கை பேரிடர்களால் முழுமையாக பாதிக்கக்கூடிய அபாயகரமான 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

 

2018 ம் ஆண்டின் உலக ஆபத்து அறிக்கையை சற்று புரட்டி பார்த்தோமானால் , 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அழிந்து போகுமாம். அந்த ஆபத்தான காலகட்டத்தை எப்படி அந்நாடுகள் எதிர்கொள்ளும் என்ற சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்க்கலாம். 

 

ஜெர்மனியில் உள்ளரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்பாட்டு உதவி கூட்டணி என்ற அரசுசாரா நிறுவனம் சேர்ந்து நடத்திய இந்த ஆய்வில் குழந்தைகளின் நிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அவர்களின் தரவுகளின்படி, உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது .

 

மேலும், மோதல்கள் அல்லது இயற்கைப் பேரிடர்களால் 2017ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்த, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 18 வயதுக்கு கீழ் உடையவர்கள் என்கிறது அந்த ஆய்வு .

 

ஆபத்தான பட்டியல் உள்ள நாடுகளின் லிஸ்ட்: 

 

              நாடுகள்              ஆபத்து பட்டியல் 

 

 

             1.வனுஅடூ                 -      50.28

             2.டொங்கா                 -      29.42

             3.பிலிப்பைன்ஸ்   -     25.14

             4.சாலமன் தீவுகள்     - 23.29

             5.கயானா                  -      23.23

             6.பப்புவா நியூ கினியா - 20.88

             7.குவாட்டமாலா -         20.60

             8.புருனை                 -         18.82

             9.வங்கதேசம்          -         17.38

            10.ஃபிஜி                             -     16.58

            11.கோஸ்டா ரிகா    - 16.56

            12.கம்போடியா           - 16.07

            13.கிழக்கு திமொர் -  16.05

            14.எல் சல்வடோர்     - 15.95

            15.கிரிபடி             -15.42

 

 

உயரும் கடல் மட்டம் உள்ளிட்ட பல்வேறு பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் அபாயங்களில் உள்ள பல தீவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

 

தென் பசிஃபிக் பகுதியில் இருக்கும் சிறிய தீவான வனுஅடூ, உலகில் பாதிக்கப்படும் நாடுகளில் முதலில் உள்ளது. அதன் அருகில் உள்ள டொங்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

சுமார் 104 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

மத்திய மற்றும் தென் பசிஃபிக் கடலில் இருக்கும் தீவுகள் ஒட்டுமொத்தமாக அபாயகரமான பகுதியாக இருப்பதாக ஜெர்மன் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள முதல் 50 நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

 

ஆய்வறிக்கையின் படி, குறைந்த அபாயம் உள்ள நாடு "கத்தார்" தான் .

 

 

இயற்கை பேரிடர்களுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

இதற்கு சிறந்த உதாரணமாக ஐரோப்பிய நாடுகளை அவர்கள் கூறுகின்றனர். கடந்த வசந்த மற்றும் கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளை தாக்கிய கோடைக் காற்றால், விவசாயம் நேரடியாக பாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை சிறப்பாக எதிர்கொண்டனர்.

 

"வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு குறைந்தளவே பாதிப்பு இருந்தது. இறுதியாக பேரழிவில் இருந்து தப்பித்தது" என்கிறார் ரூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கட்ரின் ரட்கே.

 

இதனால்தான், அடிக்கடி பூகம்பம் ஏற்படும் ஜப்பான் மற்றும் சிலி போன்ற நாடுகள் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இல்லை.

 

"இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய அழிவுகளை இந்த நாடுகளால் குறைக்க முடியாது. ஆனால், இவை மிகவும் பாதிப்படையும் நிலையில் இல்லை" என்று அந்த ஆய்வு கூறுகிறது.

 

"பருவநிலையைப் பொறுத்த வரை, 2018ஆம் ஆண்டு அதன் முக்கியத்துவத்தை பெரிதும் புரிய வைத்த ஆண்டு. தீவிர இயற்கை நிகழ்வுகளுக்கு நாம் தயார்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த ஆண்டு உணர்த்தியுள்ளது" என்கிறார் மேம்பாட்டு உதவி கூட்டணியின் தலைவர் ஏஞ்சலிக்கா பொஹ்லிங்.

உலகம், 05.12.2018

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி

சுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...

சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு

: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...

சுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு!

அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...

சுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்!

சுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...

பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு!

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...

20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம்...

பேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்!

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

1 | 2 | 3 | 4 >>