இரட்டை குடியுரிமை யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

இரட்டை குடியுரிமை யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவில் இரட்டை குடியுரிமை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த யோசனையை அமைச்சர்  முன் வைத்திருந்தார்.இதன்படி கல்வி மற்றும் தொழிற்சார் தகமைகளை கொண்டவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.

 மேலும் 2.5 மில்லியன் ரூபாய்களுக்கு அதிகமான பெறுமதியை கொண்டசொத்துக்களையோ அல்லது மூன்று வருடங்களுக்கு அதிகமான கால 2.5 மில்லியன் ரூபாய் வங்கி வைப்பினையோ கொண்டவர்களும் இரட்டை குடியுரிமை பெறுவதற்கு தகுதி பெற்றவர்களாகின்றனர்.

 அதேநேரம் 23 வயதுக்கு குறைந்த சிறார்களின் பெற்றார் 55 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் அவர்கள் சிறிலங்காவின் பிரஜைகளாகவும் இருக்கும் பட்சத்தில், குறித்த சிறார்களுக்கும் இரட்டை குடியுரிமை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.