இரவோடு இரவாக அகற்றப்பட்ட சோ். பொன் இராமநாதனின் சிலை

இரவோடு இரவாக அகற்றப்பட்ட சோ். பொன் இராமநாதனின் சிலை

யாழ் இராமநாதன் கல்லூரியில் இருந்து சோ். பொன் இராமநாதனின் சிலை இரவுடன் இரவாக அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளா் மற்றும் ஏனைய சிலரும் இச் சிலை அகற்றப்படும் போது அங்கு நின்றதாகவும் தெரியவருகி்ன்றது. இச் சிலையை அகற்றி புதிய சிலை வைக்க முயன்ற போது புதிய சிலையில் ஏராளமான குறைபாடுகள் காணப்பட்டதால் அதை நிறுவ பாடசாலைத் தரப்புக்கள் மறுத்துவிட்டதாகவும் தெரியவருகின்றது.

இதன் தொடா்ச்சியே இந்தச் சிலை அகற்றக் காரணம் எனவும் கருதப்படுகின்றது.