இலங்கையில் அதிக பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

இலங்கையில் அதிக பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

புற்றுநோய் தாக்கத்திற்குள்ளான பெரும்பாலான பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவே வருகை தருவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்  இது தொடர்பாக தெரிவிக்கையில், 

கடந்த வருடத்தில் மட்டும் 1250 புற்றுநோயாளர்கள் கண்டுபிக்கப்பட்டுள்ளனர். எனினும் மார்பகப் புற்றுநோயால் பீடிக்கப்படும் ஆண்களின் அளவு ஒரு வீதமாகவே உள்ளது. இதேவேளை கடந்த வருடத்தில் 600 பேர் நுரையீரல் புற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களே நுரையீரல் புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும்  அவர் தெரிவித்தார். -