இலங்கையில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் இருதய நோய் எச்சரிக்கை

இலங்கையில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில்  இருதய நோய் எச்சரிக்கை

இலங்கையில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் படத்துடன் கூடிய இருதய நோய் எச்சரிக்கை வாசகம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த கட்டாய விதியை மீறுகின்ற சிகரெட் நிறுவனத்துக்கும் சந்தைப்படுத்துவோருக்கும் ம் மற்றும் சந்தைப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு கூறுகின்றது.

அதாவது ஒரு வருட சிறைத் தண்டணையுடன் ருபாய் 2000 ஆயிரம் குற்றப் பணம் விதிக்கப்படும்.

ஏற்கனவே கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டிருந்தாலும் ஓரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

தற்போது சந்தைக்கு விடப்பட்டுள்ள சிகரட் பெட்டிகளில் முன் பக்க வெளிப்புறத்தில் 60 வீதம் படத்துடன் புகைத்தல் இருதய நோயை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை வாசகம் காணப்படுகின்றது.

இருதய நோயாளியொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதை காட்டுவதாக அந்தப் படம் உள்ளது.
புதிய பெட்டி அறிமுகம் தொடர்பாக தங்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதால் பழைய பெட்டி கையிருப்பு தொடர்பான பிரச்சனைகள் தங்களுக்கு இல்லை என்று வியாபாரிகள் கூறினர்.

அரசாங்கத்தின் இந்த புதிய எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையானது எதிர்பார்க்கும் பலனை தருவதாக அமையும் என உளவியல் மருத்துவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

அதேவேளை, கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
எச்சரிக்கை வாசகம் கொண்ட படத்தின் அளவை 80 வீதமாக அதிகரிப்பது என்றும் சிறைத்தண்டணையுடனான அபராதத் தொகையை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது என்றும் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.