பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் 2014ம் ஆண்டில் 2250 முறைப்பாடுகள்

பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில்  2014ம் ஆண்டில் 2250 முறைப்பாடுகள்

2014ம் ஆண்டில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் 2250 முறைப்பாடுகள் பதிவானதாக இலங்கை கணினி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர அழைப்பு பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகளின் பின் பல போலி கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த வருடத்தில் இணையம் தொடர்பில் 70 முறைப்பாடுகள் பதிவானதாக அவர் கூறினார்.

மின்னஞ்சல் மூலம் நிதி மோசடி செய்வது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்ததாக  குறிப்பிட்டார்.