ஈரல் அழற்சி. சிகிச்சை பலனின்றி 5 வயதுச் சிறுமி மரணம்

 ஈரல் அழற்சியால் 5 வயதுச் சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி  யாழ்.போதனா வைத்தியசாலையில்  நேற்று உயிரிழந்துள்ளார்.

 
கைதடி நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த சஞ்சுதா ராஜ்குமார் (வயது 5 ) சிறுமியே உயிரிழந்துள்ளார்.
 
கடந்த 24 ம் திகதி சுகவீனமுற்ற நிலையில் இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன