உடுப்பிட்டிப் பகுதியில் குடும்பஸ்தா் தனக்குத் தானே தீ மூட்டி உயிழந்தாா்

உடுப்பிட்டிப் பகுதியில் குடும்பஸ்தா்   தனக்குத் தானே தீ மூட்டி உயிழந்தாா்

குடும்பத் தகராறு காரணமாக தனக்குத் தானே தீ மூட்டி  எரிந்த நபா் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளாா். உடுப்பிட்டி இமையன் பகுதியைச் சோ்ந்த சதாசிவன் விஜயன் வயது 40 என்பவதே இவ்வாறு உயிரிழந்தவராவாா்.

கடந்த 14ம் திகதி தனது வீட்டாருடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டில் இருந்த மண்ணெய்யை தனது உடம்பில் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துள்ளாா்.

இவா் உடனடியான பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.