உலகெங்கும் நத்தார் கொண்டாட்டங்கள் வெகு விமரிசை

உலகெங்கும் நத்தார் கொண்டாட்டங்கள்  வெகு விமரிசை

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் போப் ஆண்டவர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லி ஆசிர்வதித்தார்.

தமிழகத்தில், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றவர்கள், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

திருச்சி சகாய மாதா பேராலயத்தில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை புனித மரியன்னை தேவாலயத்தில் நடந்த நள்ளிரவு பிரார்த்தனையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் மெழுகுவர்த்திகள் ஏற்றி‌ பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கோவை மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பாடல்களைப் பாடினர். திருத்துறைப்பூண்டியில் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

சேலம் குழந்தை ஏசு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தை ஏசுவை தொட்டிலில் அமர்த்தும் நிகழ்ச்சி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதேபோல் புகழ்பெற்ற சென்னை சாந்தோம் பேராலயத்திலும், பெசண்ட்நகர் வேளாங்கன்னி பேராலயத்திலும் நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில்